12 ஆண்டுகளுக்குப் பின் பவானி சாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது

1 mins read

ஈரோடு: ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பின் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் மேல் மதகில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசனத்துக்கு பவானி சாகர் அணையை நம்பியுள்ளன. தற்போது கன மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானி சாகர் அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 19.7 டிஎம்சியாக இருந்தது.