'தேசிய கட்சிகளால் காலூன்ற முடியாது'

'தேசிய கட்சிகளால் காலூன்ற முடியாது'

1 mins read
92a21816-305e-400a-9c4c-9ddfac5cd716
-

கரூர்: தமிழகத்தில் தேசிய கட்சி களுக்கு இடமே இல்லை என்று மக்களவை துணைச் சபா நாயகர் தம்பிதுரை தெரிவித் துள்ளார். நீண்ட காலமாகவே இத்த கைய நிலைதான் தமிழக அரசி யல் களத்தில் நீடித்து வருவதா கவும் கரூரில் செய்தியாளர்களி டம் பேசும்போது அவர் குறிப் பிட்டார். "பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என எந்த ஒரு தேசியக் கட்சியாலும் தமிழ கத்தில் காலூன்ற முடியாது. தேசியக் கட்சிகளுக்குச் சாதக மான போக்கு தமிழகத்தில் தற் போதும் நிலவவில்லை," என்றார் தம்பிதுரை.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தமிழக அரசியல் நிலவரம் குறித்துத் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே தம்பிதுரை இவ் வாறு பேசியதாக கருதப்படுகிறது. அண்மையில் தமிழகம் வந்த அமித்ஷா அங்கு பொய்ப் பிரசா ரம் நடந்து வருவதாகக் குறிப் பிட்டார். தமிழ், தமிழர் பெருமை என்று பேசி வருபவர்களே மக் களிடம் தவறான தகவல்களைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.