சென்னை: தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையின் போது ரூ.80 கோடி அளவுக்குக் கணக்கில் காட்டப்படாத சொத்துக் கள், வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. கடந்த சில நாட்களாக வரு மான வரித்துறை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அண்மையில் தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்துக்கான முட் டைகளை விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் எஸ்.பி.கே., என்ற கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்நிறுவனம் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்ப தாகப் புகார் எழுந்துள்ளது.
கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை
1 mins read

