சென்னை: அதிமுக அரசின் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டு களை சுமத்துவதே மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித் துள்ளார். அரசு மீதான குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று சென்னையில் செய்தியாளர் களிடம் பேசும்போது அவர் குறிப் பிட்டார். "மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அதி முக தொண்டர்கள் கிளர்ந்து எழு வார்கள். அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும். "தமிழகத்தில் 58 லட்சம் மாணவர்கள் சத்துணவுடன் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டை நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அதற் காக முட்டை கொள்முதலில் ஊழல் நடந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்?" என்று அமைச் சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி னார்.

