சென்னை: அதிமுக அமைச்சர்கள் மிக விரைவில் போலிஸ் வாகனங்களில் ஏற வேண்டி இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி என்றார்.
"காங்கிரசுக்குச் சமாதி கட்ட உள்ளதாக சிலர் பேசுகிறார் கள். கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உண்மைகளைப் புதைப்பதுதான். அதனால் தான் காங்கிரசுக்கும் சமாதி கட்டுவோம் என்கிறார்கள். "மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்கிறார். அவரைப் போன்றவர்கள் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சியின் தயவால்தான் இந்தளவு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது," என்றார் இளங்கோவன்.

