சென்னை: தமிழகச் சட்டப் பேரவைக்கு விரைவில் தேர் தல் நடக்கும் எனப் பலரும் ஆரூடம் கூறிவரும் நிலை யில், ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள் ளார் அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன். அத்தொகுதிக்குட்பட்ட வண்ணான்கோயில் பகுதி யில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத, துரோக ஆட்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். "இந்தத் துரோக ஆட்சி யின் ஊழல்கள் அனைத் தும் 'முட்டை' வழி வெளிப் பட்டு வருகின்றன. இந்த ஊழல் நிச்சயம் அணு குண்டாக மாறும். அப்போது மக்கள் விரும்பாத இந்த ஆட்சி முடிவுக்கு வரும்," என்றார் தினகரன்.
ஸ்ரீரங்கம் வேட்பாளரை அறிவித்த தினகரன்
1 mins read

