குழந்தை விற்பனை: அன்னை தெரேசா காப்பகங்களில் சோதனை

குழந்தை விற்பனை: அன்னை தெரேசா காப்பகங்களில் சோதனை

1 mins read

இந்தியாவில் அன்னை தெரேசா மிஷனரி அறக்கட்டளையின் கீழுள்ள அனைத்து குழந்தை காப் பகங்களிலும் உடனடி சோதனை நடத்த இந்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி யில் அன்னை தெரேசா மிஷனரி அறக்கட்டளையின் காப்பகத்தில் குறைந்தது ஐந்து குழந்தைகள் ஆயிரக்கணக்கான வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கன்னியாஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மணமாகாமல் கருத்தரித்த, சிரமத்திலுள்ள பெண்களுக்கான காப்பகத்திலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று காணாமல் போனதாக உள்ளூர் குழந்தை நலவாழ்வு அதிகாரிகள் போலிசில் புகார் செய்ததை அடுத்து இச்சம்ப வம் வெளிச்சத்துக்கு வந்தது.