பெற்றோரைக் கவனிக்காவிட்டால் 3 மாத சிறை

1 mins read

சென்னை: இளைய சமுதாயத்தி னர் பெரியவர்களைக் கவ னித்துக்கொள்ள வேண்டியது அவர்களது கடமை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முதியோர் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் சரோஜா 440 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் உதவி களை வழங்கினார். அப்போது பேசிய அவர், பெற்றோரைச் சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். "இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவி னர்களை அன்போடும் பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது அவர்களது தலையாயக் கடமை," என்றார் சரோஜா.