புதுடெல்லி: காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு கலைத்துள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக இந்த நடுவர் மன்றம் இயங்கி வந்தது. கடந்த 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது மத்திய அரசு. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டதால் நடுவர் மன்றம் கலைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் கலைப்பு
1 mins read

