கருணாநிதிக்கு சிகிச்சை

கருணாநிதிக்கு சிகிச்சை

1 mins read
6cca41c4-b434-4931-a50d-7577a975224d
-

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுக் குழாய் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அதனை மாற்றுவதற் காக நேற்று மருத்துவமனைக்கு சென்று உள்ளதாக கூறப்படு கிறது. கோபாலபுரம் இல்லத்தில் இருந்து நேற்றுக் காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனைக்குத் திமுக தலை வர் கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.

மூச்சுத் திணறலால் அவ்வப் போது பாதிக்கப்படும் கருணா நிதிக்கு எளிதாக மூச்சுவிட வசதியாக 'டிரக்கியோஸ்டமி' கருவிப் பொருத்தப்பட்டிருந்தது. நேற்று புதிய கருவிப் பொருத்தப் பட்ட பின்னர் மருத்துவப் பரி சோதனைகள் நடத்தப்பட்டு மாலையில் கருணாநிதி வீடு திரும்பினார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறப் படுகிறது.

மு.க.ஸ்டாலினுடன் கருணாநிதி. கோப்புப் படம்