சென்னை: 11 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தொடர் பாக புதிய தகவல்கள் வெளிவந் துள்ளன. போலிஸ் அதிகாரி ஒரு வர் அத்தகவல்களை விவரித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
வடநாட்டில் இருந்து சென் னைக்குக் குடியேறிய குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான அச் சிறுமி கேட்கும் திறனை இழந்தவர். சென்னை அயனாவரம் அடுக்கு மாடிக் குடியிருப்பில் சுமார் 300 மாடி வீடுகள் உள்ளன. அவற்றில் பல வீடுகள் காலியாக உள்ளன. அவற்றில் ஒரு வீட்டில் இந்தக் குடும்பம் வசித்து வந்த நிலையில் இவ்வாண்டு ஜனவரி 15ஆம் தேதி அச்சிறுமிக்குக் காமத் தொல்லை தொடங்கியது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் மின்தூக்கி இயக்குநர் 66 வயதான ரவிக்குமார் என்பவர்தான் அச்சிறு மிக்குக் காமவலை விரித்தார். பள்ளி வாகனத்திலிருந்து இறங் கியதும் அச்சிறுமியை ஆசை காட்டி கட்டடத்தின் கீழ்த்தளத் திற்கு அழைத்துச் சென்று பாலி யல் தொல்லைத் தரத் தொடங்கினார் அவர். பின்னர் பொதுக் கழிப்பறை, அடுக்குமாடிக் குடியிருப்பின் உச் சியிலுள்ள மொட்டை மாடி, உடற் பயிற்சிக்கூடம் என்று பல இடங் களிலும் மறைவாக வைத்து அச் சிறுமியை அவர் பாலியல் பலாத் காரம் செய்தார்.
பின்னர் இதர மின்தூக்கிப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், தண்ணீர்க் குழாய் பழுதுபார்ப்பவர் எனப் பலரையும் அச்சிறுமிக்கு அறி முகம் செய்தார். அந்தக் காமக்கூட் டம் மென்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்தும் போதை ஊசியைச் சிறுமியின் உடலில் செலுத்தியும் பாலியல் பலாத்காரத் தில் ஈடுபட்டது. ஆகக் கடைசி யாக இம்மாதம் 5ஆம் தேதி வரை அந்தக் கொடூரம் நீடித்தது. சிறுமியின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு வயிற்றுவலியால் துடித்தபோது தான் பெற்றோருக்குச் சந்தேகம் வந்தது. அச்சமயத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த தமது அக்காவிடம் நடந்த கொடுமையை விவரிக்கத் தொடங்கினார் சிறுமி.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து போலிஸ் வாகனத்தில் வெளியே கொண்டுவரப்பட்ட குற்றவாளி களை வழக்கறிஞர்கள் சுற்றிவளைத்துத் தாக்க முற்பட்டதால் அங்கு போலிஸ் படை குவிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

