சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை உண்மையான தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவரான அவர், தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிர சும் திமுகவும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் ராகு லின் இந்தப் பதிவு திமுக வட்டாரங்களில் உற் சாகத்தை ஏற்படுத்தி உள் ளது.
நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத் தில் நடப்பு மழைக் கால கூட்டத் தொடரிலேயே நிறை வேற்ற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் கடிதம் ஒன்றும் எழுதி உள்ளார். இந்தக் கடிதத்தை டுவிட்டரி லும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் காங்கிரசின் இந்தக் கோரிக்கையை ஆதரிப்ப தாக திமுக அறிவித்துள்ளது இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.
"தேர்தல் அமைப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். "அந்த வகையில் ராகுல் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக் குரியது," என்று ஸ்டாலின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் மு.க. ஸ்டாலின், ராகுல். படம்: தகவல் ஊடகம்

