பழனிசாமி: எந்த முறைகேடும் நடக்கவில்லை

பழனிசாமி: எந்த முறைகேடும் நடக்கவில்லை

1 mins read

கோவை: அதிமுக அரசின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், முட்டை கொள் முதலில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றார். முட்டை கொள்முதல் தொடர் பாக மாநில அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் போடப்பட்டதாக குறிப் பிட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டு களில் ரூ.2,031 கோடிக்கு முட்டை கள் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறினார்.

"முட்டை கொள்முதலில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறுவது உண் மைக்குப் புறம்பானது. அரசியல் ஆதாயம் தேட அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர்," என்றார் முதல் வர் பழனிசாமி. அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என்று குறிப் பிட்ட அவர், வருமான வரி செலுத்தாவிட்டால் சோதனைகள் நடப்பது இயல்புதான் என்றார். "எனக்கு தமிழகம் முழுவதும் உறவினர்கள் உள்ளனர். அவர் களும் வரி செலுத்தாவிட்டால் சோதனைகள் நடக்கவே செய் யும்," என்றார் முதல்வர் பழனிசாமி.