இறக்குமதியான வெளிநாட்டு மணல்: விலை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

இறக்குமதியான வெளிநாட்டு மணல்: விலை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 mins read
a4c8149d-caa5-4600-b6eb-2d3cb3d42a64
-

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட் டுள்ள மணல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் புது உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை டன் ஒன்றுக்கு 2050 ரூபாய் விலை கொடுத்து வாங்க தமிழக அர சுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாகப் பரவ லாகப் புகார் எழுந்தது. இதைய டுத்து மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்று மணல் இறக்குமதி செய்துள்ளது.

தற்போது தூத்துக்குடி துறைமுகத் தில் வைக்கப்பட்டுள்ள அந்த மணலை வெளியே எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இத்தடையை மதுரை உயர் நீதி மன்றக் கிளை ரத்து செய்ததை அடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப் பில் முன்னிலையான வழக்கறிஞர் கள் மணலை இறக்குமதி செய்த நிறுவனத்துடன் தமிழக அரசின் உயரதிகாரிகளைக் கொண்ட குழு இருமுறை பேச்சுவாரத்தை நடத்தியதாகத் தெரிவித்தனர். "மணல் நிறுவனம் தரப்பில் ஒரு டன் மணலின் விற்பனை விலை ரூ.1,950 என்றும், துறைமுக வாடகை, வழக்குச் செலவு ஆகி யவை காரணமாக அது தற்போது ரூ.2,750 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. "ஆனால் தமிழக அரசால் ரூ.2,050க்கு மட்டுமே மணலை வாங்க முடியும்," என்றும் தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதற்கு மணல் நிறுவனம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினர். இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தூத் துக்குடி துறைமுகத்தில் வைக்கப் பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.

மணல்குவாரியில் அள்ளப்படும் மணல். கோப்புப்படம்: ஊடகம்