நீட் மாணவர்களுக்கு நீதி தேவை: ராமதாஸ் வலியுறுத்து

நீட் மாணவர்களுக்கு நீதி தேவை: ராமதாஸ் வலியுறுத்து

fallback

22 Jul 2018 - 6:00 am

1 mins read

சென்னை: நீட் தேர்வு விவகா ரத்தில் மத்திய அரசு அதன் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தா லும் மாணவர்களுக்கு நீதி தேவை என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள்களைத் தமிழில் மொழி பெயர்த்ததில் தவறு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து தமிழில் அத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இத்தவற்றுக்குப் பொறுப்பேற்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ டேகர் தெரிவித்திருப்பது கண்ட னத்துக்குரியது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்வு நடைபெறுவதற்கு முன்பே தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட வினாத் தாள்களை சிபிஎஸ்சி அமைப்பு சரிபார்த்திருக்க வேண்டும் என வும் அவர் கூறியுள்ளார்.