லண்டன் பல்கலையில் தமிழ் இருக்கை: ரூ.54 கோடி தேவை

1 mins read

சென்னை: உலகெங்கும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது லண்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அப்பல்கலையில் ஏற்கெனவே தமிழ் மொழித்துறை இயங்கி வந்தது. எனினும் போதுமான மாணவர்கள் சேராததால் அத்துறை 1995இல் முடங்கியது. இந்நிலையில் தமிழ் இருக்கை அமைக்க அனுமதி கிடைத்துள்ளது என்றும், அதற்கு ரூ.54 கோடி நிதி தேவைப்படுகிறது என்றும் லண்டன் வாழ் தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிதி திரட்டும் பணியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என இந்த அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.