தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரில் மனித இயந்திரங்கள் உணவக ஊழியர் களாக வேலை பார்க்கின்றன. சில வெளிநாடுகளில் செயல்படும் மனித இயந்திர ஊழியர் உணவகங்களைப் போல இளையர்கள் ஐவர் சேர்ந்து கோவை நகரில் 'Robot Theme Restaurant' என்ற உணவகத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் எட்டு மாதங்களுக்குமுன் இதே பாணியில் ஓர் உணவகத்தை சென் னையில் தொடங்கினர். தங்கள் உணவகம் இந்தியாவிலேயே இத்தகைய முதல் உண வகம் என்று உரிமையாளர்களில் ஒருவ ரான ஜெகதீஷ் என்பவர் தெரிவித்தார். கோயம்புத்தூர் உணவகத்தில் பணி யாற்றும் எட்டு மனித இயந்திரங்கள் தமிழையும் ஆங்கிலத்தையும் புரிந்து கொள்ளும் என்றும் அவை வாடிக்கை யாளர்கள் கேட்கும் உணவைச் சாப்பாட்டு மேசைக்கே சுடச்சுட கொண்டு வந்து தரும் என்றும் திரு ஜெகதீஷ் கூறினார்.
தலா ஏழு லட்ச ரூபாய் செலவில் இறக்குமதியாகியுள்ள இந்த மனித இயந் திரங்கள், பல வண்ணங்களில் உலாவி வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன.
வாடிக்கையாளர்கள் கேட்ட உணவை சமையல் கூடத்திலிருந்து எடுத்துவரும் மனித இயந்திரம். கோயம்புத்தூரில் இந்த உணவகம் பலரையும் கவர்கிறது. படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

