சென்னையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள கந்தன்சாவடியில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனையில் கட்டட கட்டுமானப் பணி நடந்த இடத்தில் இரும்புச் சாரம் சரிந்து விழுந்துவிட்டதில் ஒருவர் மாண்டார். இதர 32 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இலேசான காயங் களுடன் 10 பேர் உயிர்தப்பிவிட்டனர். இடிபாடுகளில் யாராவது சிக்கிக்கொண்டு இருக்கக்கூடும் என்பதால் மீட்புப் பணி கள் சனிக்கிழமை இரவிலும் தொடர்ந்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தெரிவித்தார். அந்த மருத்துவமனையில் பெரிய மின்சார சாதனத்தைப் பொருத்துவதற்காக கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததாகத் தெரிகிறது. பணி நடந்தபோது 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு வேலை பார்த்ததாகவும் இரும்புச் சாரம் சரியத் தொடங்கியதையடுத்து பலரும் ஓடிவிட்ட தாகவும் உயிர் தப்பியவர்கள் கூறினர். கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டு இருந்தபோது சனிக்கிழமை இரவு சுமார் 7 மணிக்குத் திடீரென்று சாரம் சரிந்து விழுந்ததாக பலரும் தெரிவித்தனர்.
சென்னை அருகே தனியார் மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் நடந்தபோது இரும்புச் சாரம் சரிந்து விழுந்ததையடுத்து சனிக்கிழமை இரவு நேரத்திலும் மீட்புப் பணி தொடர்ந்தது. படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

