என் சகோதரரும் ரஜினியும் சுயநலத்துக்காக வாழ்ந்தவர்கள்: கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கடும் விமர்சனம்

என் சகோதரரும் ரஜினியும் சுயநலத்துக்காக வாழ்ந்தவர்கள்: கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கடும் விமர்சனம்

1 mins read
fe19a533-d527-4360-a9e7-dda759bc1822
-

சென்னை: நடிகர்கள் ரஜினியும் கமலும் தங்களது சுயநலத்துக்காக வாழ்ந்தவர்கள் என்று நடிகர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் மூத்த சகோத ரரான இவர் அண்மைய பேட்டி ஒன்றில் ரஜினி, கமலின் அரசி யல் பிரவேசத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இருவரும் மக்களுக்காக என்ன செய்துள்ளனர்? என்று சாருஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். கமலை விட ரஜினிக்கு மக் கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் ரஜினிகாந்தை தமிழர்கள் தங்கள் கடவுளாகப் பார்ப்பதாகக் கூறி உள்ளார்.

"பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைக்கலாம். அதேபோல் தமிழர் கட்சிகள், திராவிடக் கட்சிகளு டன் கமல் கூட்டணி வைக்கக் கூடும். "ஆனால் இவர்கள் இருவருக் கும் வாக்களிப்பதைவிட தற்போது ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப் பதில் தவறேதும் இல்லை," என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார். புலம் பெயர்ந்து தமிழகம் வந்தவர்களுக்குத் தமிழக மக்களிடம் வரவேற்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட கருணாநிதி, கேர ளாவைச் சேர்ந்த எம்ஜிஆர், கர்நா டகாவில் இருந்து வந்த ஜெய லலிதா ஆகியோர் ஆட்சியைப் பிடித்ததே இதற்கான உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக சாருஹா சன் தனது சகோதரர் கமல் ஹாசனைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.