கல்லூரிப் பேருந்து கவிழ்ந்ததில் 20 மாணவியர் காயம்

கல்லூரிப் பேருந்து கவிழ்ந்ததில் 20 மாணவியர் காயம்

1 mins read
c6e716a4-6234-495c-8b7c-18aeaec2ddf4
-

சேலம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 மாணவிகள் காயமடைந்தனர். சனிக்கிழமை கல்லூரி மாணவிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற் பதற்காக சென்னையில் உள்ள மூன்று கல்லூரிகளின் மாணவிகள், கல்லூரி ஊழியர்கள் என 30 பேர் சேலம் சென்றிருந்தனர். போட்டி நடைபெற இருந்த தனியார் கல்லூரியில் இருந்து மாணவிகளை அழைத்துச் செல்ல சிறிய பேருந்து அனுப்பப்பட்டிருந்தது. மாணவி களுடன் கல்லூரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அப்பேருந்து மேச்சேரி அருகே திடீரென கட்டுப் பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் 20 மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: தமிழக ஊடகம்