கரைபுரண்டு ஓடும் காவிரி: வெள்ள அபாய எச்சரிக்கை

கரைபுரண்டு ஓடும் காவிரி: வெள்ள அபாய எச்சரிக்கை

1 mins read
a256aeb7-f9f6-446a-83d2-7dc403f5724a
-

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ள நிலையில், காவிரிக் கரையோரப் பகுதியில் வசிப்பவர் களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐந்தாண்டு களுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டிப் பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் அம் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து, கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த வாரம் விநாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் தது. கடந்த 17ஆம் தேதி இரவு 100 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 118 அடியாக உயர்ந்துள் ளது. கடந்த 19ஆம் தேதி பாச னத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

படம்: ஊடகம்