சிறுமி சித்திரவதை: நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல்

சிறுமி சித்திரவதை: நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல்

1 mins read
820def2c-7a07-41d5-9e75-668920a6c416
-

குமரி: ஆலங்கோட்டில் மன வளர்ச்சி குன்றிய குழந்தை களை சித்திரவதை செய்த வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆலங்கோட்டில் உள்ள காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் உட லில் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இது தொடர்பாக காப்பக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காப்பக நிர்வாகிகள் மீதும் நடவ டிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் 27 பேர் மாவட்ட ஆட்சியரின் வீடு முன்பு மறியலில் ஈடு பட்டனர். அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட அவர்களை போலிசார் கைது செய்தனர். படம்: தகவல் ஊடகம்