மூன்று வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார் தினகரன்

1 mins read

தருமபுரி: அமமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தேர்தல்களை எதிர் கொள்ள இருப்பதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நல்லாட்சி மலர அனைத்துக் கட்சியினரையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். மேலும் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் அமமுக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்களையும் தினகரன் அறிவித்தார்.

"திமுக தவிர மதச்சார்பற்ற எந்தக் கட்சியும் எங்கள் கூட் டணிக்கு வரலாம். தமிழகத்தில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார். தருமபுரி தொகுதியில் ராஜேந்திரன், பாப்பிரெட்டிபட்டியில் பழனியப்பன், அரூர் தொகுதியில் முருகன் ஆகியோர் போட்டி யிடுவர்," என்றார் தினகரன். மேட்டூர் அணையைத் தூர் வாறும் பணியை முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சுட்டிக் காட்டினார். "இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குறையும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளை யும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வருமான வரிச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறேன்," என்று தினகரன் தெரிவித்தார்.