மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரைச் சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதைக் காட் டும் காணொளியை அந்நாட்டு நாளிதழ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 18 அதிகாரிகள் தம்மை அடித்து உதைக்கும்போது அந்த நபர் வலி தாங்காமல் கதறும் காட்சியைக் காணொளி காட்டியது. இதனைத் தொடர்ந்து, சிறை வாசியைச் சித்திரவதை செய்த தாக நம்பப்படும் ஆறு அதிகாரி கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். பிடிபட்ட சிறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தி சிறை வாசிக்கு வேண்டுமென்றே துன்பம் விளைவித்ததாக விசா ரணை நடத்திய அதிகாரிகள் கூறினர்.
சிறைவாசி சித்திரவதை; சிக்கிய அதிகாரிகள்
1 mins read

