பசுமை வழிச்சாலைக்கு நிலம் தர மறுத்த பெண் உட்பட ஐவர் கைது

1 mins read

திருவண்ணாமலை: பசுமை வழிச் சாலைக்கு நிலம் தர மறுத்ததுடன் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒரு பெண் உட்பட ஐந்து விவசாயிகள் கைதாகினர். நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள அத்திப்பாடி கிராமத்தில் பசுமை வழிச் சாலைக்காக நடைபெற்ற நில அளவீட்டுப் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலிசார் குவிக்கப்பட்டனர். இந்திரா என்ற பெண்மணி அதிகாரிகளுடன் வாக்குவாதம் புரிந்தார். இந்நிலையில், 4 விவசாயிகளை அடித்து உதைத்த போலிசார், அவர்களுடன் இந்திராவையும் சேர்த்து கைது செய்தனர். எனினும் ஐவரும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.