சென்னை: செய்யாத்துரை வீட்டி லும், அலுவலகத்திலும் கைப்பற் றப்பட்ட ரூ.200 கோடி பணத்துக்கு சரியான கணக்கையும், தங்க நகைக்கு முறையான ரசீதையும், அதற்கான விளக்கத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்க முடியுமா என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சவால் விடுத்துள்ளார். இவற்றை முதல்வர் வழங்கி விட்டால் தாம் அரசியல் வாழ்க் கையில் இருந்து அறவே விலகிக் கொள்வதாகவும் அவர் கூறியுள் ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட் டத்தில் பேசிய அவர், ஓ. பன் னீர்செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி என்பதைப் போல, முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர் தான் தற்போது வருமான வரித் துறை சோதனையில் சிக்கியிருக் கும் ஒப்பந்ததாரர் செய்யாத்துரை என்றார். குட்கா வழக்கில் யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தார் என்பதற் கான டைரி சிக்கியதும் அதன் அடிப்படையில் வருமானவரித் துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்று முறை விசாரணைக்காக முன்னிலை யானதாக சுட்டிக்காட்டிய ஆ. ராசா, அதன் பிறகு அமைச்சர் மீது எவ்விதமான சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார்.
"காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்காக திமுகவும் கரு ணாநிதியும் ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடவில்லை என்கிறார் முதல்வர் எடப்பாடி. கடந்த 1971இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, வாரியம் அமைக்க வேண்டும் எனத் தீர்மா னம் நிறைவேற்றியது திமுகதான்," என்றார் ராசா.
கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி 9 முறை மட்டுமே நாடாளுமன்ற அவைக்கு வந்துள் ளதாகக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமரால் பதில ளிக்க முடியவில்லை என்றார்.

