நீலகிரி: லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு டன் கணக்கில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ரூ.10 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக காய்கறி மண்டி உரிமையாளர்கள் தெரிவித் துள்ளனர். மேட்டுப்பாளையம் சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக் கிழங்கு பின்னர் அங்கிருந்து கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது நீடிக்கும் லாரி வேலை நிறுத்தம் காரணமாக மே ட் டு ப் பா ளை ய த் து க் கு உருளைக்கிழங்கு வரத்தும் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு அவற்றை அனுப்புவதும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வீதம் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் சந்தையில் குவிந்துள்ள உருளைக்கிழங்குகள். படம்: தகவல் சாதனம்

