சென்னை: தமிழகச் சுற்றுலாத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அத்துறையின் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணி களை ஈர்ப்பதில் தமிழகம் முதலி டம் வகிப்பதாக அதிகாரிகள் மேலும் கூறினர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழகத் துக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்ப தில் பிற மாநிலங்களை விடத் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு 34.50 கோடி உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிக ளும், 48.60 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் தமிழ் நாட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அந்த வகையில் பயணிகள் வருகையில் நாட்டிலேயே முதல் இடம் பெற்றுள்ளது தமிழகம். இதற்கான பாராட்டுக் கடிதத்தை மத்திய சுற்றுலாத் துறை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது. அந்தக் கடிதத்தை மாநிலச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து அவரது வாழ்த்தைப் பெற்றார். கடந்த 2013 முதல் 2017 வரை யிலான காலத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக உள்நாட்டுச் சுற்று லாப் பயணிகள் வருகையில் தமி ழகம் முதல் இடத்தில் நீடித்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் வருகையில் மீண்டும் முதலிடத்தில் தமிழகம்
1 mins read

