கொலைகார கும்பலின் கொட்டத்தை அடக்க மத்திய அரசு புதிய சட்டம்

கொலைகார கும்பலின் கொட்டத்தை அடக்க மத்திய அரசு புதிய சட்டம்

1 mins read
9a3bfc99-08c8-4299-9283-83642e477e36
-

புதுடெல்லி: மத்திய அரசின் உயர் மட்ட குழுவினர் நாட்டில் கொலை காரக் கும்பல்கள் நடத்தும் வன் முறை சம்பவங்களுக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு காண்பர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஆல் வாரில் பசு பாதுகாவலர்களால் தாக் கப்பட்ட வாலிபரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதில் காவல்துறையினர் தாமதம் செய்த தாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட குழுவின் விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வாயிலாக காட்டுத் தீயாய் பரவும் பொய்யான தகவல்களை நம்பி சந்தேகப்படும் நபர்களை எல்லாம் மர்ம நபர்கள் கும்பல் கும்பலாக சேர்ந்து தாக்கிக்கொல்லும் சம் பவங்கள் நாடெங்கும் அதிகரித்து வருகின்றன. இந்த வதந்திகளால் தமிழகம், தெலுங்கானா, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே மாதத்தில் சுமார் 20 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தக் கும்பல் களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது.