பாலைவிட பசு கோமியத்துக்கே கிராக்கி அதிகம்; ஒரு லிட்டர் ரூ.30க்கு விற்பனை

பாலைவிட பசு கோமியத்துக்கே கிராக்கி அதிகம்; ஒரு லிட்டர் ரூ.30க்கு விற்பனை

1 mins read
7b0124e1-20e3-47da-8b9d-45ac21985808
-

ராஜஸ்தான்: ஜெய்ப்பூர், ராஜஸ் தான் மாநிலத்தில் பாலுக்குக் கிடைக்கும் விலையைக் காட்டிலும் பசுவின் கோமியத் துக்குத்தான் அதிக மான விலை கிடைப்பதால் பசு மாடு வளர்ப்பவர்கள் இரட்டை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக உயர்ரக பசுக்களான கிர், தர்பாக்கர் ஆகிய பசுக்களின் சிறுநீர் லிட்டர் குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை மொத்த சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால், பாலுக்கு ஒரு லிட்ட ருக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை மட்டுமே கிடைக்கிறது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பசு மாடுகள் வளர்ப் போருக்கு பால் வியாபாரத்தைக் காட்டிலும் கோமியம் விற்பனை யின் மூலம் கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. ஜெய்ப்பூரில் இயற்கை வேளாண் பண்ணை நடத்தி வரும் கைலேஷ் குஜ்ஜார் கூறுகையில், "நான் மாட்டுப் பண்ணையும் இயற்கை பண் ணையும் வைத்திருக்கிறேன். பால் விற்பனையைக் காட்டிலும் இப்போது பசு வின் கோமியத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதலாக 30% லாபம் கிடைக் கிறது.