தமிழகத்துக்கு நேர்ந்த அவமானம்: மத்திய அமைச்சருக்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம்

தமிழகத்துக்கு நேர்ந்த அவமானம்: மத்திய அமைச்சருக்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம்

1 mins read
f0a38467-a7db-4b5b-824c-ba26269ef5e7
-

புதுடெல்லி: தமிழகத்தின் துணை முதல்வரை அவமானப்படுத்தி இருப்பது தமிழகத்துக்கு நிகழ்த்தப் பட்ட அவமானமாகவே கருதப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரி வித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், துணை முதல் வரை அவமானப்படுத்தியது கண் டனத்துக்குரியது என்றார். காங்கிரஸ் உட்கட்சி விவகாரங் கள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சென்றுள்ள திருநாவுக் கரசர் அங்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களி டம் பேசிய அவர், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை அரை மணி நேரம் காத்திருக்க வைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத் தக்கது என்றார். மேலும், காத்திருந்த பிறகும் துணை முதல்வரை மத்திய அமைச்சர் சந்திக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். "இதை ஆட்சிக்கு இழைக்கப் பட்ட அவமானமாகக் கருத வில்லை. மாறாக, தமிழகத்துக்கு நேர்ந்த ஓர் அவமானமாகவே கருதுகிறேன். "இப்படியெல்லாம் கேவலமாக நடத்தினாலும், கொஞ்சம்கூட சுரணை இல்லாமல் மீண்டும் மீண்டும் பாஜகவின் கொத்தடிமை களாகக் கிடக்கின்றனர்," என்றார் திருநாவுக்கரசர். இதற்கிடையே துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்திக்க மறுத்ததுடன் அவரை மத்திய பாதுகாப்பு அமைச்சர் காத்திருக்க வைத்தது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.