சென்னை: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பது புது விவாதங்களை எழுப்பி உள்ளது. தமது டெல்லி பயணம் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது இக்கருத்து டெல்லியில் அவர் எதிர்கொண்ட ஏமாற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது என அரசியல் கவனிப்பாளர்கள் தெரி வித்துள்ளனர். டெல்லியில் பாது காப்பு அமைச்சர் நிர்மலா சீதாரா மன், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரை ஓபிஎஸ் சந்தித்துப் பேச இருப்ப தாகக் கூறப்பட்டது. ஆனால் அத்தகைய சந்திப்புகள் எதுவும் நிகழவில்லை.
முன்னதாக தமது தனிப்பட்ட பயணமாக டெல்லி வந்திருப்பதாக செய்தியா ளர்களிடம் குறிப்பிட்டார் ஓபிஎஸ். தமது சகோதரர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவ ரைச் சொந்த ஊரில் இருந்து மதுரைக்கு அழைத்து வர ராணுவ விமானத்தை அனுப்பி வைத்து பாதுகாப்பு அமைச்சர் உதவிய தாகவும் அதற்கு நன்றி தெரிவிக் கவே தாம் டெல்லி வந்திருப்பதாக வும் ஓபிஎஸ் மேலும் தெரிவித்தார். ஆனால் அமைச்சு ரகசிய கத்தை அவர் இப்படி வெளியே தெரிவித்தது நிர்மலா சீதாராம னுக்கு கடும் நெருக்கடியை ஏற்ப டுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து பன்னீர்செல் வத்தைச் சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை என பாதுகாப்பு அமைச்சு சார்பில் ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் செய்தியா ளர்கள் சூழ்ந்தனர். அப்போது டெல்லி நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா ஏற்கெனவே கூறியுள் ளார்," என்றார் பன்னீர்செல்வம். தனக்கே உரிய வழக்கமான சிரிப்புடன் கிளம்பிச் சென்றார். செய்தியாளர்கள் மேலும் கேள்வி கேட்க அவர் அனுமதிக்கவில்லை.

