இரு கட்சியினர் இடையே மோதல்: போலிசார் குவிப்பு, 28 பேர் கைது

இரு கட்சியினர் இடையே மோதல்: போலிசார் குவிப்பு, 28 பேர் கைது

1 mins read

காஞ்சிபுரம்: விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூவத்தூர் பகுதியில் பதற்றம் நிலவியது. நேற்று முன்தினம் இப்பகுதியில் விடுதலைச் சிறுதைகள் கட்சியினர் வைத்திருந்த பதாகைகளைப் புரட்சி பாரதம் கட்சியினர் கிழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. விரைந்து வந்த போலிசார் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.