காவிரி வெள்ளம்: குழந்தைகள் உட்பட 108 பேர் மீட்பு

காவிரி வெள்ளம்: குழந்தைகள் உட்பட 108 பேர் மீட்பு

1 mins read
23bbb3ca-0227-4a54-b235-75fb1755211b
-

மேட்டூர்: காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோரப் பகுதிக ளில் வசிப்பவர்களை மீட்புப் படை யினர் அப்புறப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இவ்வாறு 108 பேரை மீட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிக ளில் கனமழை பெய்ததன் எதிரொ லியாக மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள் ளது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிப் பிடித்துள்ளது. இதைய டுத்து அணையிலிருந்து விநா டிக்கு 76 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கடந்த இரு தினங் களாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரை யோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இதனால் கடந்த இரு தினங் களாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரை யோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளனர்.