சென்னை: லட்சக்கணக் கான அப்பாவித் தமிழர் களைக் கொன்ற இலங்கை அரசுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இது தொடர் பாக உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார். வரும் மார்ச் மாதத்தில் இருந்து ஐநாவின் கட்டுப் பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் முற்றாக வெளியே போவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "அப்படி வெளியே போகும் பட்சத்தில் இலங் கையைக் கட்டுப்படுத்து வதற்கான அனைத்துப் பிடிகளும் தளர்ந்துவிடும். இந்நிலை ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் வைகோ மேலும் கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குத் தண்டனை: வைகோ வலியுறுத்து
1 mins read

