74 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து ஏமாற்றிய பெண் அதிரடியாக கைது

74 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து ஏமாற்றிய பெண் அதிரடியாக கைது

1 mins read

கடலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 74 பேரை ஏமாற்றிய ஷோபியா என்ற பெண்ணைப் போலிசார் கைது செய்துள்ளனர். 32 வயதான இவர் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. தாம் இந்திய உணவுக் கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகக் கூறி, அதற்குரிய போலி அடையாள அட்டையைக் காண்பித்து ஏமாற்றி உள்ளார் ஷோபியா. 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தனது துறையில் வேலை வாங்கித் தரமுடியும் என்று ஷோபியா கூறியதை நம்பி பலரும் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகார் கள் அதிகரித்த நிலையில் தலைமறைவானார் ஷோபியா. இம்மோசடியில் தொடர்புள்ள அவரது தாயாரும் கைதாகியுள்ளார்.