பழனிசாமி: நாடாளுமன்றக் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்

பழனிசாமி: நாடாளுமன்றக் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்

1 mins read

சென்னை: மக்களவைத் தேர்தலுக் கான கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்நிலையில் உள்ளது என்று கூறினார். இதுவரை எந்தக் கட்சியும் தேர்தலுக்கான ஆயத்தப் பணி களை முன்னெடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வதாக சுட்டிக் காட்டினார்.

"சாதாரண, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு என் னென்ன திட்டங்கள் போய்ச் சேர வேண்டுமோ அவை அனைத்தை யும் நிறைவேற்றி உள்ளோம். எல்லாத் துறைகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன. பிற மாநி லங்களுடன் ஒப்பிடும்போது தமிழ கம் சிறந்து விளங்குகிறது," என் றார் முதல்வர் பழனிசாமி. நாட்டில் வளர்ச்சி பெற்ற மாநி லங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஊடகங்க ளில் தகவல் வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழ கத்தைப் பொறுத்தவரை சில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அர சின் மீது வீண் பழி சுமத்துவதாகச் சாடினார். எதிர்க்கட்சிகள் எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், எதிலும் அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை என்றார்.