வெள்ளத்தால் வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

வெள்ளத்தால் வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

1 mins read
512ede47-4ff4-4553-ae5e-a78647d1d468
-

ஸ்ரீநகர்: கனமழையால் ஜம்மு= காஷ்மீர் மாநிலத்தின் தாசிகம், ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஐந்து மணி நேரம் வரை நீடித்த மழையால், ஹர்வான், தாசிகம், தலிபால் உள்ளிட்ட பகு திகள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது, அடுப்பெரிக்க விறகு சேகரித்துக்கொண்டிருந்த இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களைப் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர மாகத் தேடி வருவதாகவும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் அமீர் அலி கூறினார்.

ஸ்ரீநகரில் பரவலாகப் பெய்து வரும் மழையால் சில இடங்களில் சாலைகள் சேதமடைந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியதால் பயிர்கள் நாசம் அடைந்தன.

ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். மரப்பலகையின் மூலம் வெள்ளத்தைக் கடக்க குழந்தைக்கு உதவும் பெண்கள். படம்: ராய்ட்டர்ஸ்