ஓசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக் கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மணி ஓசை எழுப்பும் இசைப்பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த இசைப்பாறையில் 'சிக்கம்மா தொட்டம்மா' ஆகிய தெய்வங்கள் பல்லாங்குழி விளையாடினர் எனவும் இது தெய்வப்பாறை எனவும் அந்த கிராம மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். முற்றிலும் மற்ற பாறைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் சிறு சிறு பல்லாங்குழி வடிவத்துடன் இந்தப் பாறை அமைந்துள்ளது. மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு வரும் ஆடு, மாடுகளை வனவிலங்குகளிடமிருந்து காக்க இசைப்பாறையைத் தட்டி இசை எழுப்பி வருகிறார்கள். பாறை பற்றிய செய்தி அறிந்து சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. படம்: இணையம்
இசைப்பாறை கண்டுபிடிப்பு
1 mins read
-

