தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்குத் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதியை அடைந்து இருப்பதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கல்விராயன் பேட்டை கிராமத்தில் கல்லணைக் கால்வாயில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகே இருந்த வயல்களில் தண்ணீர் பாய்ந்து தேங்கியது. உடனடியாக செயலில் இறங்கிய விவசாயிகள், லாரிகள் மூலம் மண்ணைக் கொட்டி உடைப்பை சரிசெய்ய முயன்றனர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டுப் பணிகளைத் துரிதப்படுத்தினர். படம்: தமிழக தகவல் சாதனம்
கல்லணைக் கால்வாயில் உடைப்பு; சரிசெய்ய உடனடி நடவடிக்கை
1 mins read
-

