தமிழகம் முழுவதும் 36,000 மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் 36,000 மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

1 mins read
576c20cc-ea8c-40e5-a422-41c2c7ac3b3e
-

சென்னை: மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆயிரம் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக் கப்பட்டது. உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப் பட்டன. சென்னையில் மட்டும் பத்தாயிரம் தனியார் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.