நத்தம்: நத்தம் பகுதியில் நாவல் பழம் நல்ல மகசூலைத் தந்துள்ளது. எனவே அப்பகுதிகளில் நாவற் பழம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட ஒரு கூடை நாவற்பழம் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. நத்தம் பகுதியில் நாவல் மரங்களை அதிகளவில் விவசாயிகள் வளர்க்கின்றனர். இவற்றை மலை, காடு, கண்மாய்க் கரையோரம் ஆகிய பகுதிகளில் வளர்த் துப் பராமரித்து வருகின்றனர். புன்னப்பட்டி, காசம்பட்டி, புதுக் கோட்டை, சமுத்திராபட்டி, எட்டையம்பட்டி, தேத்தாம் பட்டி, முளையூர், ஒத்தினிபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிக ளில் நாவல் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
நாவற்பழ பருவம் தொடங்கியது
1 mins read

