போடி: அம்பரப்பர் மலை உச்சியில் இருந்து உருவாகும் நீர் வீழ்ச்சியால் இராமகிருஷ்ணாபுரத்தில் திடீர் நீரோடைகள் உருவாகியுள்ளன. போடி அருகே சின்னமனூர் ஒன்றியத்தில் இராம கிருஷ் ணாபுரம் பகுதியில் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலை உள்ளது. இயற்கை வளம் சூழ்ந்த இப்பகுதியில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட் டது. இதற் குப் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப் புத் தெரி வித் துள்ளன. இந்த நிலையில் இப்பகுதி யில் பெய்த பருவ மழையால் உருவான நீர்வீழ்ச்சி கள் அந்த இயற்கைச்சூழலுக்கு மேலும் அழகூட்டியுள்ளது.
போடியில் திடீர் நீரோடைகள்
1 mins read

