நிர்வாணப்படுத்தி கைபேசியில் படம் எடுத்தனர்: காவல்துறை அதிகாரிகள் மீது நடிகை சுருதி பகிரங்க குற்றச்சாட்டு

2 mins read
e7ce87e0-d08f-478b-8e3e-777a706ee3c5
-

சென்னை: இளையர்களிடம் திரு மண ஆசை காட்டி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை சுருதி, காவல்துறையினர் தம்மை மிரட்டியதாகப் புகார் எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் தமது வழக்கறிஞரின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந் தித்த அவர், போலிசார் தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தாகக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி போலிஸ் காவலில் இருந்த போது உதவி ஆணையர் ஒருவர் தம்மை நிர்வாணப்படுத்தி கைபேசியில் படமெடுத்ததாகவும், போலிஸ் உயரதிகாரிகளைப் பாலியல் ரீதியில் திருப்திபடுத்த வேண்டும் எனப் பெண் போலிசார் தம்மை வற்புறுத்தியதாகவும் நடிகை சுருதி மேலும் தெரிவித்துள்ளார்.

21 வயதான இவர், 'ஆடி போனா ஆவணி', 'காசு பணம் துட்டு' ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். இவை இரண்டுமே இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் திருமண ஆசை காட்டி 5 இளையர்களிடம் இவர் ஒரு கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப் படுகிறது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட இவர், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது சுருதிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதைய டுத்து செய்தியாளர்களிடம் அவர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். போலிசாரின் மிரட் டல், பாலியல் தொல்லை குறித்து நீதிபதியிடம் முறையிட்டதாகவும், குறிப்பிட்ட போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டதாகவும் சுருதி தெரிவித்துள்ளார்.

தனக்கேற்பட்ட நிலை குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க இருப்பதாகவும் சுருதி கூறியிருப்பது திரையுலக, காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.