வடஇந்தியாவில் பல மாநிலங்களி லும் பேய்மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் ஏற் பட்டுள்ளது. கட்டடங்கள் பலவும் இடிந்து விழுந்திருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் கடந்த வியாழக்கிழமை முதல் 49 பேர் மரணமடைந்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அந்த மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா நகரில் வெள்ளிக்கிழமை பெரும்பாலானவர்கள் மாண்ட தாக தெரிவிக்கப்பட்டது. வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த நான்கு பேர் அந்த நகரில் பலியானார்கள். ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆக்ராவுக்கு வெளியே இருக்கும் 16வது நூற்றாண்டு கோட்டையின் புறச்சுவரையும் வெள்ளம் நெருங்கி அதைச் சேதப்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அந்தப் புராதனச் சின்னத்திற்குப் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் பேய்மழை காரணமாக எங்கும் வெள்ளக்காடாகி இருக்கிறது. சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் இரு மாதர்களை இவர்கள் வெள்ளத்திலிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசெல்கிறார்கள். இந்த நிலையில், அந்த மாநிலத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. படம்: ஏஎஃப்பி

