கருணாநிதியைக் காண வந்த சீமான்: 'ஒழிக' முழக்கம் எழுப்பிய திமுக தொண்டர்கள்

கருணாநிதியைக் காண வந்த சீமான்: 'ஒழிக' முழக்கம் எழுப்பிய திமுக தொண்டர்கள்

2 mins read
216bfc68-682e-4fc1-8566-13b97e2523ef
-

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைச் சந்திக்க நேரில் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமானுக்குத் திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீமானை நோக்கி திமுக தொண்டர்கள் எதிர்ப்பு முழக்கங் களை எழுப்பினர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணா நிதிக்குத் தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. அவரைப் பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த தலை வர்களும், முக்கியப் பிரமுகர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட் சியின் சீமானும் நேற்று கருணாநிதி யின் உடல்நிலை குறித்து விசா ரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், யார் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யக் கூடாது என வலியுறுத்தினார். "கருத்து வெறுப்பு வேறு; மனித வெறுப்பு வேறு. மனித மாண்பு என்று ஒன்று உள்ளது.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வாஜ்பாய், சோனியாகாந்தி, அத் வானி உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தியபடி பலவற்றை விவாதித்துள்ளனர். கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க் கட்சித் தலைவர்கள் மக்கள் நல னுக்காக இணைந்து பேசுகிறார்கள். "பிறரைக் காயப்படுத்தி மகிழ் வது சரியல்ல. அது கூடாது என்று தடுக்க முயற்சிக்கிறோம். எல்லோ ருமே முழுமையான அரசியல் புரிதலோடு வருவார்களா? எனத் தெரியாது," என்றார் சீமான்.

திமுக தலைவர் குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கக் கூடாது என அவர் தம் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த பின்னர் மருத்துவமனையில் இருந்து சீமான் வெளியேறியபோது, வாயிற்பகுதியில் குவிந்திருந்த திமுக தொண்டர்கள் "சீமான் ஒழிக" என முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் சீமான் அங்கி ருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.