கொள்ளையடிக்கவே வீண் தாமதம் செய்துள்ளனர்: குற்றம் சாட்டுகிறார் அன்புமணி

கொள்ளையடிக்கவே வீண் தாமதம் செய்துள்ளனர்: குற்றம் சாட்டுகிறார் அன்புமணி

2 mins read

விழுப்புரம்: மேட்டூர் அணையை முன்பே திறந்து இருந்தால், கட லில் கலந்து வீணான தண்ணீரை மிச்சப்படுத்தி இருக்கலாம் என பாமக இளையரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். செஞ்சியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், மேட்டூர் அணை நிரம்பி வழியும் வரை ஆட்சி யாளர்கள் காத்திருந்ததற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

"மேட்டூர் அணை நிரம்பிய பின் வெளியேறும் தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது. தண் ணீரைத் தேக்கி வைக்க தடுப்ப ணைகள் ஏதும் இல்லை. கடந்த 19ஆம் தேதிதான் முதல்வர் மேட் டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டார். "மாறாக, ஒரு வாரத்துக்கு முன்பே திறந்திருந்தால் நிறைய தண்ணீரை மிச்சப்படுத்தி இருக்க லாம்," என்றார் அன்புமணி. தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடுத்த 5 மாதங்களுக்கு மணல் எடுக்க முடியாது என்று சுட்டிக் காட்டிய அவர், இதன் காரணமா கவே அணையைத் தாமதமாகத் திறந்துள்ளதாகச் சாடினார்.

"மணல் கொள்ளையடிக்கவே காலம் தாழ்த்தி தண்ணீரைத் திறந்துள்ளனர். இதுதான் உண்மை," என்றார் அன்புமணி. இந்திய மருத்துவக் கழக மசோதா அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் வெளிப் படைத் தன்மை இருக்கும் என்றார். "இதில், அனைத்து மாநிலங்க ளுக்கும் பிரதிநிதித்துவம் வேண் டும். இதை மத்திய அரசு மனதிற் கொள்ள வேண்டும். "திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். சனிக்கிழமை மு.க. ஸ்டாலினை சந்தித்து கரு ணாநிதிக்கு அளிக்கப்படும் மருத்துவம் பற்றி கேட்டறிந்தேன். இது தொடர்பான பொய்ப் பிரசாரங் களை பொது மக்கள் நம்ப வேண் டாம்," என்றார் அன்புமணி.