சென்னை: மனிதனுக்கு உடல்நலம்தான் மிக முக்கியமானது என்று துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கண்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று என்றார். "சில பொருட்களைக் கையாள்வதில் தவறு ஏற்பட்டு கண் பார்வையை முற்றிலுமாக இழக்க நேரிடுவது துரதிர்ஷ்டவசமானது. சுண்ணாம்பு, வீட்டைச் சுத்தம் செய்யும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் அமிலம் போன்ற ஆபத்தான பொருட்களை முறையாகக் கையாளத் தவறுவதால் சிறு குழந்தைகள், பெண்கள் பார்வையை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது," என்றார் வெங்கையா நாயுடு. இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெங்கையா நாயுடு: உடல்நலம், கண் பாதுகாப்பு மிகவும் முக்கியம்
1 mins read

