பிரார்த்தனைகளைக் குறை கூறாதீர்: முன்னாள் மேயர் சுப்பிரமணியன் வலியுறுத்து

பிரார்த்தனைகளைக் குறை கூறாதீர்: முன்னாள் மேயர் சுப்பிரமணியன் வலியுறுத்து

fallback

31 Jul 2018 - 6:00 am

2 mins read

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது ஆதர வாளர்களும் திமுக தொண்டர்க ளும் அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருணாநிதிக் காக திமுகவினர் இவ்வாறு வழிபாடு செய்வதை யாரும் குறை சொல்லக் கூடாது என திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் நலம்பெற வேண்டி அக்கட்சியினர் பிரார்த்த னைகளில் ஈடுபடுவதைச் சில தரப்பினர் விமர்சித்துள்ளனர். கருணாநிதி கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர் என்பதால் இந்த விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 95 ஆண்டுகளாக கருணாநிதி பகுத் தறிவுவாதியாகவே வாழ்ந்து வருவ தாக மா. சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

பெரியாரின் சீடர், அண்ணா வின் தம்பி என்பதில் உறுதியாக இருந்து, தமது கொள்கைகளில் எந்த மாறுபாடும் இல்லாமலேயே கருணாநிதி இன்றளவும் வாழ்வ தாக அவர் கூறியுள்ளார். "இத்தகைய பிரார்த்தனை களைக் கருணாநிதி விரும்ப மாட் டார் என்பது உண்மை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒருவித நம்பிக்கை இருக்கும். எல்லாவற் றுக்கும் அப்பாற்பட்டு கருணாநிதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். "இதன் காரணமாகவே கரு ணாநிதி உடல்நலம் பெறவேண்டி அவர்கள் தங்கள் நம்பிக்கையின்படி வழிபாடு நடத்துகிறார்கள்," என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார்.

திமுகவினரின் இத்தகைய பிரார்த்தனைகளை யாரும் தடுக்கக் கூடாது என்று குறிப்பிட் டுள்ள அவர், பிரார்த்தனையில் ஈடுபடுவது சம்பந்தப்பட்டவர்களின் விருப்பம் என்று கூறியுள்ளார். "சாதி, மதம், இனம், அரசியல் என்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து, கலைஞர் வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எல்லோரும் வேண்டுவது எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு," என்றும் மா. சுப்பிர மணியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.