விவாதம் நடத்த தயார்: முதல்வருக்கு சவால் விடுக்கும் அன்புமணி

விவாதம் நடத்த தயார்: முதல்வருக்கு சவால் விடுக்கும் அன்புமணி

1 mins read

சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக தாம் பதவி வகித்தபோதுதான் தமிழகத்தில் சீரழிந்து காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றால் அது இந்திய தேசிய ஊரக சுகாதார இயக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தத் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு தம்மால் தொடங்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

"மத்திய அமைச்சராக இருந்தபோது மக்களுக்காக நான் செய்த பணிகள் என்ன? முதல்வர் பழனிசாமி செய்துள்ள பணிகள் என்ன? என்பது குறித்தும் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். "முதல்வர் குறிப்பிடும் நாளில், குறிப்பி டும் இடத்தில் விவாதத்தை நடத்திக்கொள்ளலாம். இதற்கு முதல்வர் தயாரா?" என அன்புமணி சவால் விடுத்துள்ளார்.